சப்போட்டா பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் உள்ளன. கொழுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தப் பழம் ஒரு அருமருந்து. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகள் நீங்குகிறது. இந்த பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடியோடு நீங்கிவிடும். உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதோடு கண் பார்வையை அதிகரிக்கும். மன அழுத்தம், மன அமைதியின்மை, மூளைச்சோர்வு குறையும்.