ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்

84பார்த்தது
ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆளும் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைய உள்ளார். ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து திரும்பிய பின் முதலமைச்சர் பதவியை பறித்த அதிருப்தியால் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளார். இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி