ஏற்காடு - Yercaud

ஏற்காடு அருகே இளம் பெண் தற்கொலை

ஏற்காடு அருகே இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கே. புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கோவிந்தராஜ்-மகேஸ்வரி தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வார காலமாக கோவிந்தராஜுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా