ஏற்காட்டில் கிணறு தூர்வாரும் பணியின் போது வாலிபர் படுகாயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒண்டிக்கடையில் இருந்து நாகலூர் செல்லும் சாலையில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்குள்ள கிணறு தூர்வாரும் பணி நடந்து வந்தது. நேற்று காலை தொழிலாளர்கள் கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றின் உள்புறம் பவானியை சேர்ந்த சின்னையன் மகன் சண்முகம் (வயது 20) வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்த கான்கிரீட் இடிந்து சண்முகத்தின் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.