சேலம் ஏற்காட்டில் உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்

71பார்த்தது
சேலம் ஏற்காட்டில் உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்
உலக சுற்றுலா தினம் ஏற்காட்டில் கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சேர்வராயன் கோவில் பகுதியில் தூய்மை பணி நடந்தது. விதைப்பந்து எறிதல், மரபு நடைபயணம், பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு படகு இல்லம், அண்ணாபூங்கா உள்ளிட்ட இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வினோத்குமார், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் தினேஷ், தோட்டக்கலை உதவி இயக்குனர் கோவிந்தராஜ், ஜி. ஆர். டி. ஓட்டல் மேலாளர் செந்தில் மற்றும் சோனா கல்லூரி மாணவ- மாணவிகள், சேலம் டூர் ஆபரேட்டர் அசோசியேஷன் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி