ராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கர் நகரில் இன்று (அக். 29) நடந்த பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புவன் பூஷன் யாதவ் கூறியதாவது: சலாசரில் இருந்து லக்ஷ்மங்கர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார்.