சேலம் சின்னகவுண்டாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

67பார்த்தது
சேலம் சின்னகவுண்டாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் சின்னகவுண்டாபுரத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கோபால் வரவேற்றார். அட்மா குழு தலைவர் விஜயகுமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இதில், மருத்துவம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இதையடுத்து அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள் சுமதி குப்புசாமி, சங்கர், ஆவரணம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் குணலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி