அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனைமடுவுநீர் தேக்கத்தில் ஆய்வு

84பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி சேலம் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிங்கிபுரத்தில் உள்ள ஏரியை ஆய்வு மேற்கொண்டார். ஆனைமடுவு நீர்தேக்கத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்தால் நீர்மட்டம் உயரம் என விவசாயிகள மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜெயந்தி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி