விநாயகாமிஷன் விம்ஸ் ஆஸ்பத்திரியில் உலக கலை தினம் கொண்டாட்டம்

50பார்த்தது
விநாயகாமிஷன் விம்ஸ் ஆஸ்பத்திரியில் உலக கலை தினம் கொண்டாட்டம்
சேலத்தில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது. இதில் கலைகளின் முக்கியத்துவத்தை மேம்படுத்தவும், கலைஞர்களின் பங்களிப்பை கவுரவிக்கவும், கலை படைப்புகளுக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பானது இந்த ஆண்டு உலக கலை தினம் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, தமிழ் கலைகளின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட கண்ணாடி ஓவியப்போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சி முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி மற்றும் ஆண்டனி ரூபன், திவ்யா, ராஜ ஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி