சேலம் அருகே சத்துணவு சமையலர் வீட்டில் திருட்டு

81பார்த்தது
சேலம் அருகே சத்துணவு சமையலர் வீட்டில் திருட்டு
சேலம் உடையாப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரம், 20 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி