சேலம்: டெய்லர் மர்மச்சாவு - மனைவி, கள்ளக்காதலனிடம் விசாரணை

6272பார்த்தது
சேலம்: டெய்லர் மர்மச்சாவு - மனைவி, கள்ளக்காதலனிடம் விசாரணை
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (36). டெய்லர். இவரது மனைவி சரண்யா (34). நேற்று முன்தினம் மோகன் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை 'கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது. சரண்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதனை அறிந்த மோகன், இருவரையும் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் இறந்துள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும். இருப்பினும் போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்து சரண்யா மற்றும் அவரின் காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி