சேலம்: நலிவடைந்த மூத்த நிலத்தரகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

73பார்த்தது
தமிழக நிலத் தரகர்கள் நல சங்கத்தின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமை தாங்கினார் மனோகர் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழக நில தரகர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டு நிலத்தரகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாநில தலைவர் அண்ணாதுரை பேட்டியளித்தார் அவர் கூறும்போது நிலத்தரகு தொழிலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை மூலமாக பல ஆண்டு கோரிக்கையான அரசு உரிமம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சேலம் மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் நலிவடைந்த மூத்த நிலதரகர்களுக்கு ரூ. 2500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி