சேலம்: ஆசிட்டை குடித்து மூதாட்டி தற்கொலை

76பார்த்தது
சேலம்: ஆசிட்டை குடித்து  மூதாட்டி தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பி. நாட்டாமங்கலம் சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 60). இவர், குளியலறையை சுத்தம் செய்வதற்காக வைத்து இருந்த ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி