சேலம் அருகே டூவீலர் மோதி பெண் பலி

67பார்த்தது
சேலம் அருகே டூவீலர் மோதி பெண் பலி
சேலம் அரியானூர் அடுத்த வீரபாண்டி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர் நேற்று முன்தினம் (மார்ச்.9) இரவு கடைக்குச் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து காக்காபாளையம் நோக்கிச் சென்ற புல்லட் ஒன்று இவர் மீது வேகமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட இவர் தலையில் பலத்த காயமடைந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் இவரை விட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வைத்தீஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற ஆட்டையாம்பட்டி போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி