புழுதிக்குட்டை பகுதியில் உள்ள ஆனை மடுவு அணையில் கட்லா, லோகு, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் உள்ளன. இன்று காலை முதலே மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இங்கு 1 கிலோ முதல் 4 கிலோ வரை மொத்தம் 200 கிலோ மீன்கள் பிடிபட்டது. இதையடுத்து மீன் பிரியர்கள் மீனை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். 1 கிலோ ரூ. 180க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 வாரம் விலையில் எந்த மாற்றமில்லை.