சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா

68பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொன் விழா கல்வெட்டை திறந்து வைத்து பொன்விழா மலரை வெளியிட்டு உரையாற்றினர்.

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும் பொழுது, வாகனங்களில் பதிவை ஆன் லைனில் மூலமாக செய்வதில் ஏற்படும் சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு போக்குவரத்து துறை மிகவும் உதவியாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

விழாவில் அமைச்சர் கே. என். நேரு பேசும் போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளது என்றும் பேசினார்.

அப்போது சேலம் தொகுதி எம்பி டி. எம். செல்வகணபதி உட்பட லாரி உரிமையாளர்கள் அசோக் லைலேண்ட், கல்ப் ஆயில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மேலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் லாரி உரிமையாளர் சங்கம், பசுமை அமைப்பின் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி