சங்ககிரி: 15 வயது சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு

79பார்த்தது
சங்ககிரி: 15 வயது சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது21). கூலித்தொழிலாளி. இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் எடப்பாடி அருகே முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. இதுகுறித்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விரிவாக்க அலுவலர் யசோதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவர் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து விரிவாக்க அலுவலர் யசோதா சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி குழந்தை திருமணம் செய்த பாலமுருகன், இவருடைய பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி