சேலம் உடையாப்பட்டி காமராஜர் நகர் காலனியில் உள்ள சேலம் மின்வாரிய கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
சங்ககிரி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்காண மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகள் தெரிவித்துநிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி, உமாராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.