வாழப்பாடி பகுதியில் கறவை மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகள் திருவண்ணாமலை, திருச்சி மாவட்டத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு வரும், வைகோலை கொள்முதல் செய்து, கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வைக்கோலை லாரியில் அளவுக்கு அதிகமாக ஏற்றி வருவதால், போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.