சங்ககிரியில் நவீன எரிவாயு தகன மேடை கால்கோல் விழா

1041பார்த்தது
சங்ககிரியில் நவீன எரிவாயு தகன மேடை கால்கோல் விழா
சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமி தீர்த்தம் பகுதியில் இன்று (27.10.20) செவ்வாய் கிழமை காலை, முருகு சந்திரா பவுண்டேசன் மற்றும் சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கமும் இணைந்து செயல்படுத்த இருக்கும் நவீன எரி வாயு தகன மேடை, கால்கோல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்டின் சமூக சேவை, செயல்பாடுகளை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று பாராட்டி சங்ககிரி டிரஸ்டிற்கு ஊக்க படுத்தும் வகையில், பணமுடிப்பு வழங்கினார். மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தயங்காமல் கேட்கும் படி கூறினார்.

மேற்படி சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா அவர்களின் பாராட்டும், உற்சாகமூட்டும் செய்கை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும். உடன், அர்பன் பேங்க் தலைவர், ரத்தினம், வைஸ் செல்வம், மருதாச்சலம் இருந்தனர். நிகழ்ச்சியில், லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வராஜ், செயலர், நடேசன், அரிமா சங்கதின் சார்பில், அரிமா,சண்முகம், Ast கார்த்தி, GR கேஸ் ரமேஷ், ஆதிபராசக்தி மன்ற தலைவர், வேல்முருகன், அன்பழகன், டிரஸ்ட் நிர்வாகிகள், "கவுன்சிலர்" பன்னீர்செல்வம், ராகவன், "கட்டு" முருகன், "ceat"ஆனந்த் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி