சேலம்: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஞாயிற்று கிழமை அன்று ராம்மோகன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் (விவசாய அணி) முன்னிலையில் சேலத்திற்கு தலைவரின் வருகை பற்றியும், தலைவர் தலைமையில் நடக்கும் கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் (விவசாய அணியில் உள்ளவர்கள்) கலந்து கொண்டு சிறப்பித்தனர்.