தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊரக திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.
இதில் சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 140 பேர் தேர்வெழுதினர்.
மொத்தம் 50 மாணவிகள் மாவட்ட அளவில் தேர்ச்சிபெற்ற நிலையில், இப்பள்ளியில் மட்டும் 20 மாணவிகள் தேர்ச்சிபெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் தேர்ச்சி பெற்ற மாணவிகள், பயிற்சியளித்த ஆசிரியர் அருண் கார்த்திகேயன் ஆகியோரை, பள்ளியின் தலைமை ஆசிரியை கலா பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் தனலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். இதேபோல் ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 7 பேர். தேர்ச்சிபெற்று, மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை, தலைமை ஆசிரியர் ரவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் வெங்கடாசலம் பாராட்டினர்.