சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கோனேரிப்பட்டி, தேவூர், சிலுவம்பாளையம், நெடுங்குளம், காட்டூர், தம்பாக்கவுண்டனூர், பொன்னம்பாளையம், குள்ளம்பட்டி, செங்கானூர், பூமணியூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர் கொட்டாயூர், நல்லதங்கியூர், கல்வடங்கம், சென்றாயனூர், ஒடசக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு சென்றனர். இதில் பி. டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 6 ஆயிரத்து 99 முதல் ரூ. 6 ஆயிரத்து 969 வரை ஏலம் நடந்தது. மொத்தம் 525 பருத்தி மூட்டைகள் ரூ. 12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.