ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்

65பார்த்தது
ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
சேலம் ஆவின் பொதுமேலாளர் குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், பால் பவுடர், இனிப்புகள், நறுமணப்பால், பன்னீர் வகைகளும் மற்றும் பல்வேறு சுவைகளிலும், அளவுகளிலும் ஐஸ்கீரீம் வகைகள் உற்பத்தி செய்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய ஆர்வம் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, சேலம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சித்தனூர், தளவாய்ப்பட்டி, சேலம்-636 302 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். அதாவது, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் வருகை தந்து தேவையான விவரங்களை பெற்று உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி