பாஜக விவசாய அணி சார்பில் 4,000 பேருக்கு நலஉதவிகள்

64பார்த்தது
பாஜக விவசாய அணி சார்பில் 4,000 பேருக்கு நலஉதவிகள்
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி சேலத்தில் பா. ஜனதா விவசாய அணி சார்பில் 4 ஆயிரம் பேருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா மெய்யனூரில் நடந்தது. பா. ஜனதா விவசாய அணி மாநில செயலாளரும், லியோ பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவருமான ஆர். பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இதில், பா. ஜனதா மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 ஆயிரத்தும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தள்ளுவண்டிகள், தையல் எந்திரம், அரிசி, மளிகை பொருட்கள், ஹெல்மெட், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கினார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து அதன் தலைவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை லியோ பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி