விஜயதசமி தினத்தில் தொடங்கும் செயல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.
அதனடிப்படையில் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கினால் எதிர்காலம் சிறக்கும் என்பதால் வித்யாரம்பம் செய்கின்றனர். சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு வருகை தந்து தங்கள் குழந்தைகள் அரிசி, நெல்மணிகளின் மீது "அ" "ஓம்" என ஆர்வத்தோடு எழுத வைத்தனர். மேலும், மோதிரம் கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதி எழுத்தறிவித்தல் செய்யப்படுகிறது.
விஜயதசமி தினமான இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.