சேலம் மக்களவைத் தொகுதியில் தி. மு. க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி. மு. க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வின் போது, அமைச்சர் கே. என். நேரு, மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம். எல். ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.