பெரமனூரில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரி பொதுமக்கள் மனு

54பார்த்தது
பெரமனூரில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரி பொதுமக்கள் மனு
சேலம் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் பெரமனூர் பகுதி பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரமளி ராமலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: -பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெரமனூர் பகுதியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளை நோட்டமிடுகின்றனர். 

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்களை நோட்டமிடுகின்றனர். இதனால் பொதுமக்கள், பெண்கள் வெளியே வர பயப்படுகிறார்கள். கடந்த 10-ந்தேதி ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெரமனூர் பகுதியில் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி