சேலம் மாநகராட்சி 12வது வார்டு பகுதியில் சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஜான்சன் நகர், கோர்ட் ரோடு காலனி, கண்ணார்தெரு, ஜான்சன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணியை மேற்கொண்ட மாணவ மாணவிகளுக்கு 12வது வார்டு கவுன்சிலர் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பிரியாணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 12வது வார்டு கவுன்சிலர் சங்கீதா நீதி வர்மன், கல்லூரி பேராசிரியர்கள் செந்தில்குமார், சுறும்பார் குழலி, மற்றொரு செந்தில்குமார், கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.