நெல்லையில் பள்ளி மாணவன் சக மாணவனால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" என உதவி காவல் ஆணையர் கூறுகிறார். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று சக மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.