CSK கேப்டன் தோனி தனது காலை ஊன்ற முடியாமல் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்றைய (ஏப்ரல் 14) LSG அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும், தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரும்போது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடதுகால் முழங்காலில் தோனி அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், தோனிக்கு என்னாச்சு ஏன் இப்படி நடக்குறாரு என கேட்டு வருகின்றனர்.