கர்நாடகா பகுதியில் பலத்த மழை பெய்து வந்ததால் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்வரத்தை நேற்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். உடன் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.