தூய்மையே சேவை என்ற திட்டம் மூலம் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம், கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதை அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி தொடங்கி வைத்தார். இதில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. நோய் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் உதவி ஆணையர் லட்சுமி, சுகாதார அலுவலர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், சித்தேஸ்வரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர்கள் ஆனந்த், ஸ்ரீராம் மற்றும் நர்சுகள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.