சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் நாகலதா (வயது 35). இவர் நேற்று முன்தினம்(டிச.20) சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே பஸ் வந்த போது நாகலதா பேக்கில் வைத்திருந்த செல்போன், ரூ. 250-ஐ வாலிபர் ஒருவர் நைசாக திருடினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்த சக பயணிகள் அவரை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை நடத்தினார். இதில் அவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சந்தைபேட்டையை சேர்ந்த மகேஸ்வரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.