காதல் திருமணம்: 16 வயது சிறுமி கர்ப்பம்

6015பார்த்தது
காதல் திருமணம்: 16 வயது சிறுமி கர்ப்பம்
சேலம் பள்ளப்பட்டி வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆரீப் உசேன் (20). இவரும் சாமிநாதபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் கடந்த இரண்டு. ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்காக அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார்.

அப்போது சந்தேகத்தின் பேரில் அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தனர். அதில் அவருக்கு 16 வயது என தெரியவந்தது. இது பற்றி மருத்துவர்கள் சூரமங்கலம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி