பெட்ரோலில் கலப்படம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை

59பார்த்தது
பெட்ரோலில் கலப்படம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நேற்று(செப்.17) பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது: -

பெட்ரோல் விற்பனை உரிமையாளர்கள் தினமும் தங்களது சேமிப்பில் உள்ள டீசல், பெட்ரோலை மாதிரிகள் எடுத்து அதனை அதற்கான குடுவைகளில் சேமித்து சம்பந்தப்பட்ட விற்பனை பிரதிநிதி மூலம் சோதனை செய்து தரத்தை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தரம் வாய்ந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் அளவு மற்றும் அதற்கான விலை வைக்க வேண்டும். பெட்ரோலில் கலப்படம், அளவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து வாகனங்களை தவிர வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வழங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், மூர்த்தி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி