சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் நரேஷ்பாபு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மாற்றி வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்த திட்டத்தை கைவிட வேண்டும். இந்தியாவின் பழமையான சட்டங்கள் மற்றும் ஷரத்துக்களின் பெயர்களை மாற்றக்கூடாது. வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும். வக்கீல்கள் உரிமை காக்க மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், பொருளாளர் அசோக்குமார், துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பெண் வக்கீல்கள் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி