சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி சார்பில் கார்கில் போர் வெற்றி தின விழாவையொட்டி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் சட்டக்கல்லூரியை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் கோர்ட்டு முன்பு முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லெப்டினன்ட் கர்னல் ஏ. பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கார்கில் போர் நடைபெற்ற விதத்தையும், அதில் சந்தித்த அனுபவங்களையும் மாணவர்களிடம் விளக்கி பேசினார். மேலும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ராணுவத்துறையில் நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கார்கில் போர் நினைவு கூறும் விதமாக அதனை ஓவியமாக வரைந்த மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க குழு உறுப்பினர்கள் கர்ணன், பிரேம்குமார், மருதுபாண்டி, ராகுல், புஷ்பவனம், சத்யபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.