சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 47). இவர் சொந்த வேலையாக சேலம் வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும், அவரது பின்னால் நின்ற பெண் ஒருவர், லட்சுமி வைத்திருந்த பர்சை ஜேப்படி செய்து அதில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார். இதை கவனித்த லட்சுமி சத்தம் போட்டார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்ணை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துர்கா (37) என்பதும், பணம் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து துர்காவை போலீசார் கைது செய்தனர்.