பெரியார் பல்கலையில் ஊழல் புகார் கூறிய மாணவர்களிடம் விசாரணை

66பார்த்தது
பெரியார் பல்கலையில் ஊழல் புகார் கூறிய மாணவர்களிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு தீன் தயாள் உபாத்யா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய பணத்தை முறையாக செலவு செய்யாமல் மோசடி செய்ததாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் புகார் செய்தனர். அதில், பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கு போதிய இடவசதி செய்து தரவில்லை. விடுதியில் தரமான உணவு வழங்கப்படவில்லை. எங்களை இழிவுப்படுத்தி திட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், சேலம் மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து புகார் தெரிவித்த மாணவர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் 12 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் புகார் தெரிவித்த 10 மாணவர்கள், சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி