மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

61பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு அவர் கூறியதாவது: -
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 271 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகள் 14 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலி, 2 பேருக்கு தையல் எந்திரம், ஒருவருக்கு காதொலி கருவி என 4 பேருக்கு ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 430 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி