சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று (டிச. 11) நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 12) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.