சேலம் எஸ். கே. எஸ். மருத்துவமனை, கேலக்ஸி ரோட்டரி சங்கமும் இணைந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மெய்யனூர் பணிமனையில் ‘உயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் பஸ் டிரைவா், கண்டக்டர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் அளித்தனர். இந்த பயிற்சியை எஸ். கே. எஸ். அவசர, தீவிர சிகிச்சை துறைகளின் டாக்டர்கள், முதலுதவிக்கு பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் பயிற்சிகள் கற்று கொடுக்கப்பட்டன. முகாமில் 700-க்கும் மேற்பட்ட டிரைவா், கண்டக்டர்கள் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சிகளை பெற்று பயனடைந்தனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், எஸ். கே. எஸ். மருத்துவமனை நிறுவன மேலாளர் சுரேஷ் விஸ்வநாதன், சேலம் கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் பொன்னுச்சாமி, செயலாளர் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.