லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடை நீக்கம்

65பார்த்தது
லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் 5-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 59) என்பவர் உதவியாளராக பணியாற்றினார். பூசாரிப்பட்டி வைரன்காடு பகுதியை சேர்ந்த ராஜதுரை மனைவி செல்வராணி புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனிடையே ராஜதுரைக்கு போன் செய்த ராஜேந்திரன் ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் புதிய ரேஷன் கார்டு பெற்று தருவதாக கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராணி இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்பேரில் செல்வராணி ரசாயன பவுடர் தடவிய ரூ. 4 ஆயிரத்தை ராஜேந்திரனிடம் கொடுத்தார். பணத்தை அவர் பெற்ற போது அங்கு மறைந்திருந்த போலீசார் ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதை தொடர்ந்து ரேஷன் கார்டு பெற்று தர ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான ராஜேந்திரனை செயலாட்சியர் புனிதா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி