ஆன்லைன் ரம்மியால் தகராறு; மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

66பார்த்தது
ஆன்லைன் ரம்மியால் தகராறு; மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
சேலம் திருவாக்கவுண்டனூரை அடுத்த அம்மாசி நகரை சேர்ந்தவர் அபினேஷ் (வயது23). சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தர்ஷினி (21). அபினேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் மோகம் கொண்டிருந்தார். அதன்மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. மேலும் பணம் கேட்டு மனைவியிடம் தொந்தரவு செய்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அபினேஷ், மனைவியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி