பிரபல நிறுவன போலி டீத்தூள் விற்ற வடமாநில வாலிபர் கைது

74பார்த்தது
பிரபல நிறுவன போலி டீத்தூள் விற்ற வடமாநில வாலிபர் கைது
சேலத்தில் ஒரு சில கடைகளில் பிரபல நிறுவன டீத்தூள் மற்றும் சோப்பு பெயர் மற்றும் அதன் லேபிள்கள் ஒட்டி, போலியாக டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் மாநகரில் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சூரமங்கலம் பகுதியில் உள்ள சில கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரை லேபிளில் ஒட்டி டீத்தூள், சோப்பு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலி டீத்தூள், சோப்புகளை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி