பத்மவாணி மகளிர் கல்லூரியில் லூயிஸ் பாய்ஸ்டர் பிறந்தநாள் விழா

84பார்த்தது
பத்மவாணி மகளிர் கல்லூரியில் லூயிஸ் பாய்ஸ்டர் பிறந்தநாள் விழா
சேலம் கருப்பூர் அடுத்த கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள பத்மவாணி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியலை கண்டுபிடித்த லூயிஸ் பாய்ஸ்டர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி, செயலாளர் துரைசாமி ஆகியோர் அலங்கரித்து வைத்திருந்த லூயிஸ் பாய்ஸ்டர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கல்லூரி முதல்வர் ஹரி கிருஷ்ணராஜ், பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், செயல் அலுவலர் ரமேஷ், நுண்ணுயிரியல் துறை தலைவர் ஜனனி மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி