சேலம்: ரயிலில் வந்த 2 கிலோ கஞ்சா சிக்கியது

82பார்த்தது
சேலம்: ரயிலில் வந்த 2 கிலோ கஞ்சா சிக்கியது
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு சேலம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று(செப்.20) காலை 7 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.

பின்னர் 2-வது பொது பெட்டியில் கழிவறை அருகில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. அதனைப் போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது, அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை யார் கடத்தி வந்தார்கள்? என்பது தெரியவில்லை. கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி