மேட்டூர் அடுத்த கொளத்தூரில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் கருங்கல்லூரில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கருங்கல்லூரில் சோதனையிட்டபோது பெருமா (49) என்ற பெண் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பெருமாவை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.