தொழிலாளியிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

81பார்த்தது
தொழிலாளியிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது
சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 34). மீன் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று மாதையன்குட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த முரளி (43) என்பவர் சுரேஷ்குமாரிடம் பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே பாக்கெட்டில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ய முயன்றார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முரளி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ. 400-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் முரளி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து சுரேஷ்குமார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முரளியை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி